ஆப்பிள் ஐபோன் குறித்து 15 ஆண்டுகள் கழித்து வெளியான ஒரு ரகசியம்! இது ஆச்சரியம்
ஆப்பிளின் முதல் ஐபோன் தொடர்பிலான ஒரு ரகசியம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் கசிந்துள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபோனை கடந்த 2007-ம் ஆண்டு வெளியிட்டார். அது வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. அந்த சாதனம் தான் நவீன ஸ்மார்ட்போன் கான்செப்டின் துவக்கமாக இருந்தது என்றே கூறலாம்.
ஒரிஜினல் ஐபோன் ஒரு புரட்சிகரமான சாதனமாக இருந்தாலும், அதில் கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சம் இடம்பெறவில்லை. ஆப்பிளின் முதல் ஐபோன் உருவாக்கத்தில் பணியாற்றிய கென் கொசிண்டா என்கிற பொறியாளர், அதற்கான உண்மை காரணத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில், முதல் ஐபோனை உருவாக்கும் போது கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சங்களை அதில் புகுத்த எங்களுக்கு போதுமான நேரம் இல்லை. ஐபோனின் கீபோர்டு, ஆட்டோகரெக்ஷன் மற்றும் டெக்ஸ்ட் சிஸ்டத்தில் வேலை செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தோம்.
வடிவமைப்பு குழுவிற்கு கூட அதை செயல்படுத்த நேரம் இல்லை, அதனால்தான் இந்த அம்சம் ஆப்பிளின் முதல் ஐபோனில் இடம்பெறவில்லை. பின்னரே அது அடுத்த மொடல் ஐபோனில் தான் அது அறிமுகமானது என குறிப்பிட்டுள்ளார்.
The original iPhone didn’t have cut/copy/paste. Infamous! The quickest explanation is that I didn’t have time to do it right. I had too much keyboard, autocorrection, and text system work to do. The design team didn’t have time either. So we passed on the feature for 1.0. https://t.co/SLncIxohkk
— Ken Kocienda (@kocienda) June 19, 2022