கணினி கீபோர்ட் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் ஆப்பிள்
கணினிகளைப் பயன்படுத்தும்போது கீபோர்ட்களின் உதவி மிகவும் இன்றியமையாததாகும்.
தற்போது பொத்தான்கள் வடிவில் கீக்கள் தரப்பட்டுள்ளன.
சிலவற்றில் ஒளிரக்கூடிய தொழில்நுட்பமும் தரப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் இக் கீக்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
அதாவது கீக்களின் மேற்பகுதிகளில் திரைகளை (Display) உள்ளடக்கவுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தாம் விரும்பிய வகையில் கீக்களின் இருப்பிடங்களை மாற்றியமைக்க முடியும்.
தற்போது உள்ள அனேகமான கீக்கள் QWERTY முறையிலானவையாகும்.
இந்த ஒழுங்கினை தமக்கு ஏற்றவாறு பயனர்கள் மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இத் தொழில்நுட்பமானது ஆப்பிளின் MacBook சாதனங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.