நான்கே நாட்களில் ரூ.32,00,000 கோடியை இழந்த Apple நிறுவனம்., மொத்த மதிப்பு எவ்வளவு?
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Apple நான்கு நாட்களில் 383 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் அபரிமிதமான உயர்வு ஏற்பட்டது. இதில் தொழில்நுட்ப பங்குகள் மிகப்பாரிய பங்கு வகித்தன. ஆனால் புத்தாண்டு அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை.
அமெரிக்காவில் Magnificent Seven எனப்படும் ஏழு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து நான்கு நாட்களாக சரிவை சந்தித்துள்ளன.
இதில் Apple, Amazon, Alphabet Inc., Microsoft, Meta Platforms, Tesla Inc. மற்றும் Nvidia Corporation ஆகியவை அடங்கும்.
கடந்த நான்கு நாட்களில் உலகின் மதிப்புமிக்க நிறுவனமான Apple நிறுவனத்தின் பங்குகள் 4.6% சரிந்துள்ளன.
இந்த iPhone தயாரிப்பு நிறுவனத்தின் சந்தை மூலதனம் இந்த காலகட்டத்தில் 383 Billion Dollars குறைந்துள்ளது. இது இலங்கை பணமதிப்பில் ரூ. 1,23,73,362 கோடி ஆகும்.
இது உலகின் மிகப்பாரிய பணக்காரரான Elon Muskன் சொத்து மதிப்பை விட ஒன்றரை மடங்கு அதிகம். எலோன் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 220 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.71,07,414 கோடி) ஆகும்.
மஸ்கின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான Teslaவின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் 8.8 சதவீதம் சரிந்துள்ளன. நான்காவது காலாண்டில், நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது, ஆனால் இந்த காலகட்டத்தில் அதன் ஆட்சி முடிவுக்கு வந்தது.
டெஸ்லா இப்போது அதிக EVகளை விற்பனை செய்வதில் சீன நிறுவனமான BYDஐ விட பின்தங்கியுள்ளது.
டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சியால் மஸ்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. Bloomberg Billionaires Indexன் படி, எலோன் மஸ்க் கடந்த இரண்டு நாட்களில் 8.98 பில்லியன் டொலர் இழந்துள்ளார். கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 92 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
எந்த நிறுவனம் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இருக்கிறது?
Companymarketcap.com படி, Apple நிறுவனம் 2.865 Trillion Dollars சந்தை மூலதனத்துடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
Microsoft 2.754 Trillion Dollarகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சவுதி அரேபியாவின் அரசு நிறுவனமான Saudi Aramco மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 2.126 Trillion Dollars ஆகும்.
Google-ன் தாய் நிறுவனமான Alphabet ($1.746 டிரில்லியன்) நான்காவது இடத்திலும், Amazon ($1.534 பில்லியன்) ஐந்தாவது இடத்திலும், Nvidia ($1.174 பில்லியன்) ஆறாவது இடத்திலும் உள்ளன.
இதைத் தொடர்ந்து Facebookன் தாய் நிறுவனமான Meta Platforms ($885.23 பில்லியன்), Berkshire Hathaway ($797.76 பில்லியன்) மற்றும் Tesla ($758.01) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Apple inc, Elon Musk, Elon Musk Net Worth, Bloomberg Billionaires Index, Magnificent Seven, Apple Loss in four day, Google Alphabet, Amazon, Nvidia, Facebook, Meta Platforms, Berkshire Hathaway, Tesla, Microsoft, Saudi Aramco