மைக்ரோசாப்ட், Nvidia வரிசையில்... புதிய வரலாறு படைத்த ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 0.4 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, வரலாற்றில் 4 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டிய மூன்றாவது நிறுவனமாக ஆப்பிள் மாறியுள்ளது.
சாதனை உச்சம்
ஐபோன் தயாரிப்பாளரின் பங்கு விலை கணிசமாக அதிகரித்துள்ளது, அதாவது, ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பெரும் சரிவிலிருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிகபட்ச வருவாய் 1.4 டிரில்லியன் டொலர் என பதிவானது.

இந்த மாத தொடக்கத்தில் பங்கு விலை சாதனை உச்சத்தை எட்டியது, இதுவரை ஆண்டின் அதிகபட்ச விலையில் நிறைவடைந்தது. மட்டுமின்றி, இதுவரை AI தொழில்நுட்பத்தை தவறவிட்ட போதிலும், ஆப்பிள் நிறுவனம் 4 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு நிதியாண்டின் முடிவுகள் அக்டோபர் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும், மேலும் வலுவான சேவை வருவாய் மற்றும் மேக் விற்பனையால் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் வளர்ந்து வரும் சேவைகளான ஆப்பிள் டிவி+, ஆப்பிள் பே, ஆப்பிள் மியூசிக் மற்றும் பலவற்றிலிருந்து வருவாய் ஈட்டி வருகிறது.

மூன்றாவதாக
நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில், ஆப்பிளின் கட்டண சந்தாதாரர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்தனர், மட்டுமின்றி கட்டண சந்தாக்கள் இரட்டை இலக்கங்களாக அதிகரித்தன.
இந்த நிலை எதிர்வரும் காலாண்டிலும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் டிவி+ மாதாந்திர சந்தாவை 12.99 அமெரிக்க டொலர்களாக உயர்த்தியுள்ளது.

2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு விற்பனையில் ஆப்பிள் டிவி+ வருவாய் 29.2 சதவீதமாகும். 4 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டும் முதல் நிறுவனமாக சில மாதங்களுக்கு முன்னர் Nvidia மாறியது.
ஆனால் மிக விரைவிலேயே, ஜூலை மாதம் அந்த சாதனை வட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் மூன்றாவதாக இணைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |