குறைந்த விலையில் Macbook மற்றும் iPhone அறிமுகம்: ஆப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு
குறைந்த விலையில் மேக்புக் மற்றும் ஐபோன்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறைந்த விலையில் ஆப்பிள் சாதனங்கள்
ஆப்பிள் நிறுவனம் சாமானிய மக்களும் தங்களின் சாதனங்களை வாங்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அதாவது ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையிலான மேக்புக்(Macbook) மற்றும் பட்ஜெட் விலையிலான ஐபோன்(iPhone) ஆகியவற்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக மார்ச் 4ம் திகதி பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக இத்தகைய நிகழ்வுகள் கலிப்போர்னியாவின் ஆப்பிள் பார்க்கில் நடத்தப்படும் நிலையில், இந்த புதிய அறிமுக விழாவானது நியூயார்க், ஷாங்காய் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
என்னென்ன சாதனங்களை எதிர்பார்க்கலாம்?
இந்த புதிய விலை குறைந்த தயாரிப்புகளை 2026 ஆம் ஆண்டின் பாதியில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் சாதாரண பயனர்களை கவரும் வகையில் சுமார் ரு.55,000 முதல் ரூ.72 500 விலையில் மேக்புக் ப்ரோ மற்றும் ஏர் மாடல் லேப்டாப் அறிமுகம் செய்யப்படலாம்.
இவை மஞ்சள், பச்சை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய பல வண்ணங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 17 மாடலை விட குறைந்த விலையிலான iPhone 17e மாடல் வெளியிடப்படலாம்.
அத்துடன் ஐபேட் மாடல்களும் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |