iPhone சிப் கொண்ட MacBook: குறைந்த விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ள அப்பிள்
அப்பிள் நிறுவனம், iPhone-ல் பயன்படுத்தப்படும் A18 Pro சிப்யைப் பயன்படுத்தி ஒரு குறைந்த விலையுள்ள புதிய MacBook மொடலை 2026-ல் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 13 inch MacBook, தற்போது கிடைக்கும் ரூ.99,999 மதிப்புள்ள M4 சிப் கொண்ட MacBook Air-ஐவிட குறைவாக விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வாளர் Ming Chi Kuo-வின் தகவலின்படி, இந்த புதிய மொடலின் வெளியீடு, COVID-19 காலத்தில் இருந்த 25 மில்லியன் MacBook விற்பனை இலக்கை மீண்டும் அடைவதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது. இதில் 5–7 மில்லியன் யூனிட்டுகள் இந்த புதிய மொடலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இதற்குப் பிறகும், அப்பிள் தனது XR (Extended Reality) சாதனங்கள் வரிசையிலும் பல மாற்றங்களை 2027–28 காலக்கட்டத்தில் கொண்டுவர இருக்கிறது.
இதில் “Vision Air” எனப்படும், எடை குறைந்த XR ஹெட்செட், மற்றும் AI வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடிகள் உள்ளிட்டவை இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் தனது Vision Pro ஹெட்செட்டின் மேம்பட்ட பதிப்பை 2025 இறுதியில் M5 சிப் மூலம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple budget MacBook 2026, A18 chip MacBook launch, Affordable MacBook India, Apple MacBook with iPhone chip, Apple Vision Air 2027, Apple XR smart glasses 2028, Ming Chi Kuo Apple predictions, Apple Vision Pro M5 chip, Apple MacBook Air alternatives, Apple upcoming XR devices