ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 3 விரைவில் வெளியாகும்!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 வரும் வாரங்களில் அறிமுகமாகும் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
புது ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஹை பெடிலிட்டி ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் புதிதாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த சந்தாவுக்கான கட்டணம் 9.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 750 ஆக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த சேவை சமீபத்தில் அறிமுகமான ஸ்பாடிபைக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வின் போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.