ஆப்பிளின் புதிய AirPods Max அறிமுகம்: என்னென்ன மாற்றங்கள்
ஆப்பிள் நிறுவனத்தில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் (AirPods Max) என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
AirPods Max அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம், தனது ஏர்பாட்ஸ் சீரிஸ் மாடல்களில் புதிய மாற்றங்களை செய்து வரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் வல்லுனர் மார்க் குர்மேன் கூறும்போது, "ஏர்பாட்ஸ் டிசைன், கேஸ் (Case ) போன்றவற்றை Update செய்து ஆடியோவின் தரத்தை மேம்படுத்த திட்டமிடபட்டுள்ளது" என்றார்.
மேலும், 2024 -ம் ஆண்டு ஏர்பாட்ஸ் மேக்ஸ் (AirPods Max) என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், 2025 -ம் ஆண்டு AirPods Pro Version அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.
அதாவது, புதிய இயர்பட்ஸ் மற்றும் Pro மாடல்கள் முழுவதும் புதிய டிசைன்கள் மற்றும் ஆடியோ தரத்தில் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
நான்காம் தலைமுறை
இந்த புதிய AirPods அறிமுகப்படுத்தும் போது இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களின் விற்பனை நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனை சரிசெய்யும் வகையில், 2 நான்காம் தலைமுறை AirPods மாடல்கள் வெவ்வேறு விலைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
AirPods Max மாடலில் யு.எஸ்.பி. சி (UBS -C ) வகை சார்ஜிங் புதிய நிறங்களில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 2025 -ம் ஆண்டு ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் (AirPods Pro Version) ரிடைசன் செய்யப்பட்டு அதிவேக சிப்செட் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |