இனி உங்கள் IPhone-ஐ நீங்களே ரிப்பேர் செய்யலாம்! Apple அறிவித்த அட்டகாசமான திட்டம்
Apple நிறுவனம் அதன் சாதனங்களை வாடிக்கையாளர்களே சுலபமாக பழுதுபார்க்கும் கையேடுகள் மற்றும் உண்மையான பாகங்களை வழங்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் அழுத்தத்தின் விளைவாக, இந்த சுய சேவை பழுதுபார்ப்பு திட்டத்தை (Self Service Repair) Apple கொண்டுவந்துள்ளது.
நுகர்வோர் தங்கள் IPhone, Mac கணினிகளை தாங்களாகவே சரிசெய்துகொள்ள அனுமதிக்கும் Apple 'செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டம்' நவம்பர் 17, புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப கட்டத்தில் iPhone 12, iPhone 13 மாடல்களுக்கான பாகங்கள் மற்றும் காம்போனென்ட்கள் கிடைக்கும்.
பின்னர் ஒரு கட்டத்தில், M1 சிப்களால் இயக்கப்படும் Mac இயந்திரங்களும் இந்த சுய சேவை பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்பதை Apple உறுதிப்படுத்தியுள்ளது.
தங்கள் ஐபோன் 13, ஐபோன் 12-ஐ தாங்களாகவே சரிசெய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் Apple Self Service Repair ஆன்லைன் ஸ்டோர் மூலம் உண்மையான பாகங்களை ஆர்டர் செய்யலாம்.
இருப்பினும், பழுதுபார்ப்பதற்கு முன், பழுதுபார்க்கும் கையேட்டைப் படிக்குமாறு அவர்கள் முதலில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடைகளில் 200-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாகங்கள் மற்றும் கருவிகள் கிடைக்கும்.
திட்டத்தின் ஆரம்ப கட்டமானது ஐபோன் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா போன்ற பொதுவாக சர்வீஸ் செய்யப்பட்ட தொகுதிகளில் கவனம் செலுத்தும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் கூடுதல் பழுதுபார்ப்புகளுக்கு ஆதரவை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம், தொழிலாளர் கூலி மற்றும் சம்பந்தப்பட்ட பிற வரிகளைக் குறைப்பதன் மூலம் பழுதுபார்ப்பு செலவைக் குறைக்க உதவும்.
மின்னணு சாதனங்களைப் பழுதுபார்ப்பதில் அறிவும் அனுபவமும் உள்ள தனிநபர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுய-சேவை பழுதுபார்ப்பதைத் தேர்வுசெய்யலாம் என்று ஆப்பிள் பரிந்துரைக்கிறது.
மற்றவர்கள், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பழுதுபார்ப்புக்கு உண்மையான ஆப்பிள் பாகங்களைப் பயன்படுத்தும் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தொழில்முறை பழுதுபார்ப்பு வழங்குநரை அணுக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் உதிரிபாகங்கள் மற்றும் கருவிகளின் அதே விலையில், பழுதுபார்க்கும் கடைகளில் வழங்கப்படும்.
பழுதுபார்த்த பிறகு அவர்கள் பயன்படுத்திய பழைய பாகங்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு திரும்ப கொடுத்தால் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்கும் என்றும், ஆண்டின் பிற்பகுதியில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.