சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐபோன் மற்றும் பிற பிரீமியம் மொடல்களின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது.
டாடா குழுமம்
முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது உற்பத்தி அலகுகளை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற இருக்கிறது. வரவிருக்கும் ஐபோன் 17ன் உற்பத்தி மையமாக இந்தியா இருக்கும், ஐபோன் ஏர் முதல் ப்ரோ மொடல்கள் வரை நான்கு மொடல்களும் இனி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
டாடா குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் நடத்தும் ஆலைகள், ஆப்பிள் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் ஐந்து உள்ளூர் தொழிற்சாலைகளில் அடங்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டாடாவின் ஆலையும், பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ளன. உற்பத்தியைப் பொறுத்தவரை டாடா குழுமம் ஆப்பிளின் வளர்ந்து வரும் கூட்டாளியாக இருந்து வருகிறது,
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியை டாடா நிறைவேற்ற வாய்ப்புள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றுவது ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே நடந்துள்ளது.
வரிகளின் தாக்கம்
சீன நிறுவனங்களை பெரிதும் நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களை ட்ரம்ப் ஏற்கனவே குறிவைத்துள்ளார். வரி அபராதத்தை தவிர்க்வே ஆப்பிள் இந்த நகர்வை எடுத்துள்ளது.
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அமெரிக்காவின் பெரும்பான்மையானோரின் கோரிக்கையை நிறைவேற்ற, ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்தியது.
ஆப்பிள் நிறுவனம், தற்போதைய காலகட்டத்தில் வரிகளிலிருந்து 1.1 பில்லியன் டொலர் எதிர்விளைவை எதிர்பார்க்கிறது என்று இந்த மாத தொடக்கத்தில் கூறியது.
இந்த நிலையில், அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஆப்பிள் நிறுவனம் தனது நான்கு ஐபோன் 17 மொடல்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |