நிறைமாத கர்ப்பிணி உயிரை காப்பாற்றிய Apple Smart Watch.. Notification -ல் வந்தது என்ன?
கையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் (Apple Smart Watch) அணிந்திருந்ததால் நிறைமாத கர்ப்பிணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
பொதுவாக தற்போது பலரும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் வாட்ச்களை அணிகின்றனர். எவ்வளவு தூரம் நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஸ்மார்ட் வாட்ச் கணிக்கிறது. அந்தவகையில் Apple Smart Watch சிறந்ததாக கூறப்படுகிறது.
Istock
பலபேரின் உயிரை Apple Smart Watch காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் பெண் ஒருவரின் உயிரை Apple Smart Watch காப்பாற்றியது என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
கர்ப்பிணிக்கு தகவல் கொடுத்த Smart Watch
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் வெரோனிகா வில்லியமஸ் என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் அணிந்திருந்த Apple Smart Watch -ல் இருந்து Notification ஒன்று வந்துள்ளது. அதில், அவரின் இதயத் துடிப்பு சாதாரண அளவை விட அதிகமாக இருந்தது. அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் உடனே மருத்துவரை அணுகினார்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அப்போது, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. வெரோனிக்காவிற்கு அரிதான மைகோகார்டிட்டிஸ் (Mycocarditis) நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
பின்னர், ஒருமாதமாக மருத்துவர் லூயிஸ் பென்சன் அவருக்கு சிகிச்சை அளித்து நலமுடன் வீடு திரும்பினார். தற்போது, குழந்தையுடன் இருக்கும் வெரோனிகா வில்லியமஸ் Apple Smart Watch-க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதேபோல 40 வயதுடைய நபருக்கு Apple Smart Watch series 6 மூலமாக Vo2 குறைந்த அளவில் இருப்பதாக Notification வந்துள்ளது. அவரும் உடனடியாக மருத்துவரை அணுகி உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். இது மாதிரியான மனிதர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |