iPhone 16 போன்கள் முதல் முறையாக இந்தியாவில் வெளியிட Apple திட்டம்
இந்தியாவில் முதல் முறையாக ஐபோன் 16 ப்ரோ மாடல்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் iPhone 16 Pro மாடல் போன்களை தயாரிக்கும் திட்டத்தை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'மேடின் இந்தியா' (Made In India) ஐ-போன் 16 ப்ரோ மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இந்திய சந்தையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது உண்மையாக இருந்தால், நாட்டில் உள்ள ஐ-போன் உற்பத்தியாளர்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐபோன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அதற்காக உள்நாட்டு பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளது.
ஒரு முன்னணி ஆங்கில நாளிதழின் கட்டுரையின்படி, தைவானிய நிறுவனங்களான Foxconn, Pegatron மற்றும் Wistron ஆகியவற்றுடன் ஆப்பிள் சீனாவில் மிகப்பெரிய உற்பத்தி செயல்முறையை எடுத்துள்ளது.
ஐபோன் 16, ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்கள் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபோன் 15 பதிப்பு போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ போன்கள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தனது ஐபோன் ப்ரோ போன்களை சீன சந்தைக்கு வெளியே தயாரிப்பது இதுவே முதல் முறை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |