ரஷ்யாவிற்கு ஆப்பு வைத்த ஆப்பிள் நிறுவனம்! முக்கிய உத்தரவு அமுலுக்கு வந்ததால் திணறும் மக்கள்
ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதோடு அனைத்து மின்னணு சாதனங்கள் விற்பனையை நிறுத்தவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய ஓன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே, மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தின.
இதனால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியாமல் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் ரஷ்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், மேலும் வன்முறையின் விளைவாக பாதிக்கப்படும் அனைத்து மக்களுடனும் நிற்கிறோம் என்று ஆப்பிள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.