”Face Unlock With MASK"! ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்
மாஸ்க்குடன் face unlock திறக்கும் புதிய தொழிநுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
புதுமைகளை உலகிற்கு புகுத்தும் ஐபோன் நிறுவனம் மீண்டும் ஒரு புதுமை சேர்க்கும் முனைப்பில் ஈடுபட்டு உள்ளது.
ஐ போன் நிறுவனம், முகக்கவசத்துடன் கூடிய முக அமைப்புகளை ஸ்கேன் செய்து face lockயை திறக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொழிநுட்பமானது iOS 15.4 இன் முதல் டெவலப்பர் பீட்டாவில் நிஃப்டி அம்சம் இருப்பதாகவும், அதில் தங்கள் பயனாளர்கள் முகக் கவசத்துடன் கூடிய உங்கள் முகத்தை கண்டறியும் அமைப்பை உங்கள் ஐபோனில் அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் தங்கள் பயனாளர்களின் கண்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கொண்டு செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அதனை பயன்படுத்தும் போது பயனாளர்கள் sunglasses அணிந்து இருந்தால் இந்த face lock அமைப்பு செயல்படாது என்றும், சாதாரண கண்ணாடிகளில் அணிந்து இருக்கும் போது செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஃபேஸ் ஐடி iOS 15.4 பீட்டாவின் ஒரு பகுதி என்பதால், இதனை தற்போது தங்கள் சோதனையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் பரிசோதித்து வருவதாகவும், இதில் எதிரான முடிவுகள் வந்தால் தங்கள் பயனர்களின் பயன்பாட்டிற்கு வராது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த iOS 15.4 பீட்டா தொழில்நுட்பம் ஐபோன் 9 மற்றும் மேக் 5 போன்ற புதிய ஐபோன் மாடல்களில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.