ChatGPT, Google Bard; போட்டிக்கு களமிறங்கும் AppleGPT
ஆப்பிள் நிறுவனம் AppleGPT என்ற புதிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை உருவாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஆப்பிள் நிறுவனம் Open AI-ன் ChatGPT உடன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீப காலங்களில் AI திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. ஆப்பிள் நிறுவனமும் அதே பாதையில் செல்கிறது.
தற்போது, AI சாட்போட்களுக்கான முக்கிய போட்டி ChatGPT மற்றும் Google-ன் Bard ஆகியவற்றுக்கு இடையே உள்ளது. ஆனால் இந்த களத்தில் ஆப்பிள் நுழைவதால் போட்டி கடுமையாக இருக்கும்.
ஆப்பிள் GPT அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் AI தலைவர் ஜான் கியானன்ட்ரியா மற்றும் மென்பொருள் பொறியியல் தலைவர் கிரேக் ஃபெடரிகி ஆகியோர் புதிய திட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.
ஆப்பிளின் ஊழியர்கள் தற்போது உருவாக்கப்பட்டு வரும் ஆப்பிளின் AI சாட்போட்களுக்கு சிறப்பு அணுகலைக் கொண்டுள்ளனர் என்பது அறியப்படுகிறது. இது தற்போது வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்படவில்லை. பல குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அது சரி செய்யப்பட்ட பின்னரே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என ஆப்பிள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
AppleGPT, Chat GPT, Open AI, Artificial Intelligence, Google Bard, AI Chatbot