iPhone-ல் சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களைக் கண்டறியும் புதிய அம்சம்!
அமெரிக்காவில் உள்ள அனைத்து iPhone-களையும் ஆப்பிள் நிறுவனம் ஸ்கேன் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
iPhone, iPad ஆகிய iOS சாதனங்களில் சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களைக் கண்டறிந்து புகார் அளிக்கும் அம்சத்தை Apple நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
சிறுவர்களைப் பாதுகாப்பதோடு, சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயனாளர்கள், Apple நிறுவனத்தின் iCloud-ல் படங்கள் பதிவேற்றபடும்போது, அவை சிறார் பாதுகாப்பு அமைப்புகள் வழிகாட்டும் பாலியல் துன்புறுத்தல் படங்களுடன் ஒப்பிடப்படும்.
அத்தகைய படங்கள் குறித்து, அமெரிக்காவின் காணாமற்போன, துன்புறுத்தப்படும் சிறுவர்களுக்கான தேசிய நிலையத்திடம் Apple புகார் அளிக்கும்.
எனினும், அந்தப் புதிய அம்சத்தை அரசாங்கங்களும் மற்ற அமைப்புகளும் தவறாகப் பயன்படுத்தலாம் என சில மின்னிலக்க உரிமை அமைப்புகள் குறைகூறியுள்ளன.
ஆனால், பயனாளர்களின் தனிநபர் அந்தரங்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக Apple தெளிவுபடுத்தியது.