லேட்டஸ்ட் ஐபோன் மொடலின் தயாரிப்பை நிறுத்தவுள்ள ஆப்பிள்! ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்கள்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி மொடலின் தயாரிப்பை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு புதிய ஐபோன் 12 வரிசையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொடல்களை அறிமுகப்படுத்தியது.
அதில் ஐபோன் 12 மினி மொடலை தவிர மற்ற மொடல்களுக்கான வரவேற்பும் விற்பனையும் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாக உள்ளது.
ஐபோன் 12 மினிக்கான சந்தை தேவை பலவீனமாக இருப்பதாகவும், அதன் உலகளாவிய விற்பனை மிகக் குறைவாக இருப்பதையும் சமீபத்தில் ஜேபி மோர்கன் சேஸின் ஆய்வாளர் வில்லியம் யங் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், ஆய்வாளர்கள் விநியோக சங்கிலி ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 2021-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி உற்பத்தியை நிறுத்தப் போகிறது என்று கூறியுள்ளனர்.
இதனால், ஐபோன் 12 மினியை ஐபோன் வரலாற்றில் மிகக் குறுகிய கால முதன்மை மாடலாக (most short-live flagship model) மாறும் என்று கூறப்படுகிறது.
மறுபுறம், ஆப்பிள் இந்த ஆண்டு புதிய வரம்பில் மற்றொரு சிறிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 12 புரோ மேக்ஸ் விற்பனை 11 மில்லியன் யூனிட்டுகள், ஐபோன் 12 ப்ரோ 2 மில்லியன் யூனிட்டுகளும், ஐபோன் 11 மாடல் 8 மில்லியன் யூனிட்டுகளும் விற்பனை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகமாகவுள்ள ஐபோன் 13 சீரீஸ்களில் 80 முதல் 90 மில்லியன் யூனிட்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.