உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் ஆப்பிள் முதலிடம்
ஆப்பிள் நிறுவனம், உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
4.88 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டுடன், ஆப்பிள் (Apple), 4.86 டிரில்லியன் மதிப்பீட்டில் உள்ள என்விடியாவை (Nvidia) முந்தியுள்ளது. என்விடியாவின் மதிப்பு 3.5 சதவீதம் குறைந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது.
கலிபோர்னியாவின் கியூப்பர்டினோவில் தலைமையகம் கொண்ட ஆப்பிள், கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் என்விடியா 5 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டியிருந்தது.
சமீபத்தில் ஆப்பிள், தனது Siri AI assistant-ஐ மேம்படுத்தி வெளியிட்டது. இது பயனர்களின் கேள்விகளை தனிப்பட்ட சூழலில் புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. மேலும், இணையத்தில் நேரடி தகவல்களை அணுகி சிக்கலான பணிகளையும் செய்யும்.
முதலில் ஆப்பிள் குறைந்த AI முதலீடு காரணமாக விமர்சிக்கப்பட்டாலும், தற்போது அது ஒரு பலமாகக் கருதப்படுகிறது.
“ஆப்பிள், cloud infrastructure அளவிலான செலவுகளைச் செய்யாமல், consumer AI-இல் இருந்து அதிக பலன் பெறுகிறது” என்று Founder ETFs நிறுவனர் மைக்கேல் மோனகன் கூறினார்.
ஆப்பிள், ஜூலை 30 அன்று தனது மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட உள்ளது. கடந்த காலாண்டில் 14 முதல் 17 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சி ஏற்படும் என நிறுவனம் கணித்துள்ளது.
மேலும், ஆப்பிள் CEO டிம் குக், செப்டம்பர் மாதத்தில் பதவியை ஜான் டெர்னஸுக்கு ஒப்படைக்க உள்ளார். டெர்னஸ், 2021 முதல் ஆப்பிளின் ஹார்ட்வேர் பொறியியல் பிரிவை வழிநடத்தி வருகிறார்.
இந்த முன்னேற்றம், ஆப்பிளின் AI மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மையமாகக் கொண்ட நீண்டகாலத் திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |