ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்! பணத்தை திருப்பி கேட்கும் வாடிக்கையாளர்கள்: காரணம் தெரியுமா?
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்களால் ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள் ஹெட்செட் திருப்பி அனுப்பி ஆப்பிள் நிறுவனத்திடம் தங்களது பணத்தை திருப்பி தரும்படி கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
ஆப்பிள் விஷன் ப்ரோ: Apple's Vision Pro Headsets
வெகுமதிப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் 'விஷன் ப்ரோ' ஹெட்செட் இந்த மாத தொடக்கத்தில் விற்பனை சந்தையில் அறிமுகமானது.
ஆப்பிள் நிறுவனம் முன்பதிவு விற்பனையாக மட்டும் 2 லட்சம் யூனிட் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்களை விற்பனை செய்ததாக தெரியவந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் 'விஷன் ப்ரோ' ரியாலிட்டி ஹெட்செட் சந்தையில் அறிமுகமானதும் சிறப்பான விற்பனை பெற்றாலும், தற்போது ஆரம்ப கட்ட வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் ஹெட்செட்களை திருப்பி அனுப்பி, முழு பணத்தையும் திரும்ப கேட்பது நிறுவனத்திற்கு சவாலாக மாறியுள்ளது.
3,499 டொலர்கள் மதிப்புள்ள இந்த ஹெட்செட்டுக்கு ஆப்பிள் வழங்கும் 14 நாட்கள் திருப்பி அனுப்பும் காலத்திற்குள் அதிகமானோர் திருப்பி அனுப்பி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உடல் பாதிப்புகள்: பார்வைக்கு பாதகம்
திருப்பி அனுப்புவதற்கான முக்கிய காரணமாக பலர் தலைவலி, கண் சோர்வு மற்றும் ஒட்டுமொத்த உடல் அசெளகரியத்தை குறிப்பிடுகின்றனர்.
பேட்டரி பேக் உடன் 1 கிலோ வரை எடையுள்ள விஷன் ப்ரோ, போட்டியாளர்களின் ஹெட்செட்டுகளை விட கனமானது. தலைப்பட்டி வடிவமைப்பும் அழுத்தம் மற்றும் சோர்வுக்கு காரணமாக இருப்பதாக பயனர் கருத்துகள் தெரிவிக்கின்றன.
இந்த உடல் பாதுகாப்பு வசதி சார்ந்த குறைபாடுகள், ஹெட்செட்டின் அதிநவீன அம்சங்கள் இருந்தபோதிலும் சிலருக்கு பிரச்சனையாகி வருகின்றன.
கண்டென்ட் பஞ்சம்
உடல் வசதி பிரச்சனைகள் மட்டுமல்லாமல், கவர்ச்சியான கண்டென்ட் இல்லாததும் திருப்பி அனுப்புவதற்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. விஷன் ப்ரோ தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும், அதன் மென்பொருள் நூலகம் மிகக் குறைவாகவே உள்ளது.
வலுவான ஆப் சூழலை எதிர்பார்த்த ஆரம்ப கட்ட பயனர்கள் ஏமாற்றமடைந்து, ஹெட்செட்டின் நீண்ட கால மதிப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
ஆப்பிளின் பதில்
வாடிக்கையாளர்களின் அதிருப்தியை அறிந்த ஆப்பிள், உடல் வசதி பிரச்சனைகளைத் தீர்க்க விரிவான ஆதரவை வழங்கி வருகிறது. மாற்று தலைப்பட்டி பாகங்களை பரிந்துரைப்பது மற்றும் உடற்கூறு ரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவது ஆகியவை இதில் அடங்கும்.
கூடுதலாக, வரும் காலங்களில் வெளியாகவுள்ள கண்டென்ட் அதிகரிப்ப மற்றும் ஆப் உருவாக்க திட்டங்களை நிறுவனம் முன்னிலைப்படுத்தி வருகிறது.
விஷன் ப்ரோவின் எதிர்காலம்
ஆரம்ப கட்ட திருப்பி அனுப்புகள் சவால்களைக் காட்டுவதாக இருந்தாலும், விஷன் ப்ரோவை இன்னும் தோல்வி என்று அறிவிப்பது அவசரம்.
தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் பயனர் அனுபவத்தில் கவனம் செலுத்தும் ஆப்பிள், உடல் வசதி பிரச்சனைகளை தீர்த்து கண்டென்ட் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |