முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உதவிய Apple Vision Pro
பிரித்தானியாவில் முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஆப்பிள் விஷன் புரோ (Apple Vision Pro) உதவியாக இருந்துள்ளது.
லண்டனில் தனியார் வைத்தியசாலை ஒன்றில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆப்பிள் விஷன் ப்ரோவை சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தயுள்ளனர்.
eXeX நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயலியுடன் இணைந்து பயன்படுத்தப்பட்ட இந்த சாதனம், நிகழ்நேர தரவு ஸ்ட்ரீமிங், அறுவை சிகிச்சை தயாரிப்பு மற்றும் கருவித் தேர்வு ஆகியவற்றை எளிதாக்கியுள்ளது.
டெய்லி மெயிலின் படி, அறுவை சிகிச்சை நிபுணர்கள் நேரடியாக விஷன் ப்ரோவைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அறுவை சிகிச்சை குழுவில் உள்ள ஒரு ஸ்க்ரப் செவிலியர் அறுவை சிகிச்சை முழுவதும் ஹெட்செட்டை அணிந்திருந்தார்.
விஷன் ப்ரோவைப் பயன்படுத்தி, செவிலியர் நிகழ்நேர தரவு ஸ்ட்ரீமிங்கை அணுகுவதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவினார்.
லண்டன் இன்டிபென்டன்ட் மருத்துவமனையின் முன்னணி ஸ்க்ரப் செவிலியர் சுவி வெர்ஹோ, இந்த தொழில்நுட்பத்தை கேம் சேஞ்சர் என்று பாராட்டினார்.
ஆப்பிள் விஷன் ப்ரோ மனித பிழை மற்றும் யூகங்களை அகற்றவும், அறுவை சிகிச்சை முறைகளில் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Apple Vision Pro, eXeX Apple Vision Pro, Apple Inc, London Apple