தூங்கும்போது பக்கத்திலேயே சார்ஜ் போடுபவரா நீங்கள்? எச்சரிக்கும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் ஸ்மார்ட்போனை தூங்கும்போது பக்கத்திலேயே வைத்து தூங்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிளின் எச்சரிக்கை
பொதுவாக செல்போனை தலைக்கு அருகில் வைத்து தூங்குவது பலரது அன்றாட செயலாக உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பலர் தூங்கும் இடத்திற்கு அருகிலேயே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதை சாதாரண விடயமாக கருதுகிறார்கள்.
ஆப்பிள் நிறுவனம் இந்த செயல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சரியான மொபைல் சார்ஜிங்கின் முக்கியத்துவத்தை ஆப்பிள் வலியுறுத்துகிறது.
அதாவது, சார்ஜிங் கேபிளுடன் இணைக்கப்பட்ட மொபைல் உடன் தூங்குவதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.
இவற்றில் தீ, மின்சார அதிர்ச்சி, காயங்கள் அல்லது செல்போன் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும் என்கிறது ஆப்பிள். எனவே தான் ஆப்பிள் தற்போது தங்கள் பயனாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்ற அபாயங்களை தவிர்க்க நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் கேபிளுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது, தங்கள் ஸ்மார்போன் சார்ஜ் ஆவதை உறுதி செய்ய வேண்டும்.
போர்வை அல்லது தலையணைக்கு அடியில் மொபலை சார்ஜ் செய்வதும், சாதனம் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் அபாயம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
CASEZY/GETTY IMAGES
அத்துடன் ஐபோன்கள், பவர் அடாப்டர்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்களை எப்போதும் நன்கு காற்றோட்டமான இடங்களில் பயன்படுத்த வேண்டும் அல்லது சார்ஜ் செய்ய வேண்டும் என ஆப்பிள் பரிந்துரைக்கிறது.
மேலும் மூன்றாம் தரப்பு சார்ஜர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்தை ஆப்பிள் எடுத்துக் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |