ஆப்பிள் மீது வழக்கு: வாட்ச் பேண்டுகளில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு
புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் கொண்ட பொருட்களை தயாரிப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வாட்ச் பேண்டுகளில் பெர்ஃப்ளூரோஅல்கைல் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் ரசாயனங்கள் (PFAS) உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த ரசாயனங்கள் புற்றுநோய், மரபணு பாதிப்பு மற்றும் பிற ஆரோக்கிய சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
வழக்கு விவரம்
ஆய்வில் பல்வேறு நிறுவனங்களின் 22 வாட்ச் பேண்டுகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 15 கட்டங்களில் PFAS ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆப்பிளின் Ocean, Nike Sport மற்றும் Sport வாட்ச் பேண்டுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆப்பிளின் பதில்
ஆப்பிள் தனது வாட்ச் பேண்டுகள் புறூரணோலைஸ்டோமர்* (fluoroelastomer) மூலம் தயாரிக்கப்படுவதாகவும், இது PFAS ரசாயனங்களை கொண்டதில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், வழக்கு இந்த தகவல்களை எதிர்த்து, ஆப்பிள் உண்மைகளை மறைத்துள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது.
சுகாதார சாதனங்கள் என்ற பெயரில் அபாயம்?
ஆப்பிள் வாட்ச் பேண்டுகள் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் சாதனங்களாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் இதயத் துடிப்பு, நடப்பு அடிகளை கணக்கிடுதல் போன்ற பல ஆரோக்கிய தகவல்களை அளிக்கிறது.
ஆனால், இதே நேரத்தில் பேண்டுகளில் இருந்துபடும் ரசாயனங்கள் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது என்பது எதிர்வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆப்பிளின் தயாரிப்பு தரத்தையும், சுகாதார பாதுகாப்பு வாக்குறுதிகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple Watch Band Cancer pausing chemicals, Apple Smart Watch, Apple Watch