போனஸும் கொடுத்து ஊழியர்களை வீட்டிலேயே பணிபுரிய சொன்ன பிரபல நிறுவனம்!
Apple நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 1000 டொலர் போனஸ் அறிவித்து,மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் (Work From Home) வசதியை ஜனவரி மாதம் வரை நீட்டித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான Omicron பரவ தொண்டன்கிய நிலையில், Apple நிறுவனம் காலவரையின்றி அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான தனது திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளது.
Apple நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் வீட்டிலிருந்து பணிபுரியும் போது அவர்களின் தேவைகளுக்காக 1,000 டொலர் (ரூ. 76,156) போனஸாகப் பெறுவார்கள் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்த செய்தியை ட்விட்டரில் அறிவித்தார், அதில் அவர் பணிக்குத் திரும்பும் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறினார்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு, தற்காலிகமாக பிப்ரவரி 1-ஆம் திகதியை அலுவலகத்திற்கு திரும்பும் நாளாக நிர்ணயித்து இருந்தது.
ஆனால் இப்போது Omicron மாறுபாட்டின் காரணமாக வீட்டிலிருந்து வேலையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானத்தை அடுத்து, கடந்த வாரம் டெக்சாஸில் உள்ள மூன்று சில்லறை கடைகளை மூடியாதத தொடர்ந்து, இந்த வாரத்தில் மற்றொரு கடையையும் மூடியது.