Apple நிறுவனம் உருவாக்கும் புதிய iPhone Flip- வெளியான தகவல்
Apple நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் Apple நிறுவனம் இரண்டு A flip-style iPhone மாடல்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
iPhone மட்டுமின்றி மடிக்கக்கூடிய iPad மாடலையும் Apple உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Apple மடிக்கக்கூடிய சாதனம் என கூறி ஏராளமான காப்புரிமைகள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் Apple உருவாக்கி இருக்கும் இரண்டு Prototype மாடல்களும் அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.
இவற்றின் உற்பத்தி அடுத்த ஆண்டு வரையிலும் துவங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
Apple வல்லுனரான Ming Chi Kio Apple Flip Phone மாடலின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும், புதிய சாதனத்தின் Design எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனில், இந்த திட்டத்தையே Apple நிறுவனம் முழுமையாக ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது.
Flip iPhone மட்டுமின்றி Apple நிறுவனம் மடிக்கக்கூடிய iPad மாடலையும் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |