இந்திய மாநிலம் ஒன்றில் டொனால்டு ட்ரம்புக்கு குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பம்
இந்திய மாநிலமான பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலத்தில் ட்ரம்ப் பெயரால் சர்ச்சை
இந்திய மாநிலமான பீகார், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) பெயரில் குடியிருப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மோசடி என்று அதிகாரிகள் கண்டுபிடித்ததால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் மக்கள் பலரும் குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

11 ஆண்டுகளுக்கு முன்பு சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களாவை எழுதி வைத்த என்ஜினியர்.., நெகிழ்ச்சி சம்பவம்
அந்தவகையில், மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் டொனால்டு ஜான் ட்ரம்ப் என்பவர் குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஜூலை 29 -ம் திகதி அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பம் போலியானது என்றும், டொனால்ட் டிரம்பை சமஸ்திபூரில் உள்ள ஹசன்பூர் கிராமத்தில் வசிப்பவர் என்று காட்ட முயன்றதும் தெரியவந்துள்ளது.
மேலும், பெற்றோரின் பெயர்களாக பிரடெரிக் கிறிஸ்ட் டிரம்ப் (Frederick Christ Trump) மற்றும் மேரி ஆன் மேக்லியோட் (Mary Anne MacLeod) என்றும், ட்ரம்பின் புகைப்படம் மற்றும் போலியான ஆதார் கார்டு ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் சார்பார்க்கையில் போலி என அடையாளம் கண்டனர். அதன்படி, ஆகஸ்ட் 4-ம் திகதி அன்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது சைபர் செல்லிடம் (cyber cell) ஒப்படைக்கப்பட்டு, மோசடி செய்த நபரைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்ய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |