Apply Oil in Navel: தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தொப்புளில் எண்ணெய் வைப்பது பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றாகும், அதன் தோல் மெல்லியதாகவும் அருகில் பல சிறிய இரத்த நாளங்கள் இருப்பதாலும் ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சக்கூடிய இடமாகும்.
ஆயுர்வேத முறைப்படியும் தொப்புளில் எண்ணெய் வைப்பது உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது.
தினமும் இரவு தூங்கச்செல்லும் முன் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உண்டாகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
எண்ணெய் வைப்பதால் பலன்கள்
தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, வயிற்று வலியை போக்கும்.
செரிமானத்தை அதிகரிப்பதுடன் வயிற்று உப்புசத்தை போக்குகிறது, மனபதற்றத்தை குறைக்கிறது.

தொப்புள் கர்ப்பப்பை நரம்புகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால் கர்ப்பபை-யில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது, பெண்களுக்கு கருவுறுதலை அதிகரிக்கிறது.
நல்ல தூக்கத்தை வழங்கும், ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடி வளரும்.
தேங்காய் எண்ணெய்
அனைத்து சரும வகைகளுக்கும் பொருந்தும் தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் உள்ளன, தொப்புளில் இதனை தடவும் போது இறுக்கமான ஆடைகள் அல்லது வியர்வையால் ஏற்படும் வறட்சியை குறைக்கிறது.

நல்லெண்ணெய்
பாரம்பரிய முறைப்படி மூட்டுகள் மற்றும் தசைகளை சுற்றியுள்ள இறுக்கத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, குளிர்காலங்களில் தொப்புளில் தடவும் போது வயிற்று பகுதியை தளர்வாக்குகிறது, லேசாக சூடுபடுத்திய பின்னர் பயன்படுத்துவது உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
பாதாம் எண்ணெய்
வைட்டமின் இ நிறைந்த பாதாம் எண்ணெயானது உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு ஏற்றது, சருமத்தை மென்மையாக்குகிறது, பழைய தழும்புகளின் தோற்றத்தை மேம்படுத்துகிறது, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது.

கடுகு எண்ணெய்
சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, அடிவயிற்றில் ஏற்படும் இறுக்கம் மற்றும் கனமான உணர்வை போக்குகிறது, எனினும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கலாம். தொப்புளில் பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை பரிசோதித்துக்கொள்வது அவசியம், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல.
கவனத்திற்கு
தொப்புளில் பயன்படுத்துவதற்கு முன்னதாக அந்த பகுதியை எப்போதும் கழுவவும், சில துளிகள் மட்டும் பயன்படுத்துவது சிறந்தது, ஏதேனும் அலர்ஜி தடிப்பு ஏற்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது மருத்துவ தீர்வு அல்ல, நபருக்கு நபர் மாறுபடும்.