சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தல்... ஒரு பயனுள்ள தகவல்
சுவிஸ் குடியுரிமை பெற, பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் வயது வரம்பு குறித்து ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?
வயது வரம்பு குறித்து ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?
சுவிஸ் குடியுரிமை குறித்து விவரங்கள் வெளியிடும் இணையதளங்கள் சில, சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர், 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்கின்றன. அது உண்மையா?
சுவிஸ் குடியுரிமைக்கு, பெற்றோருடன் அல்லது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக விண்ணப்பிக்காமல், தனியாக ஒருவர் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவரது வயது 18க்கு குறையாமல் இருக்கவேண்டும்.
ஆக, 18 வயது ஆகியிருக்கவேண்டும் என்ற விடயம் உண்மைதான். ஆனால், சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 65 என்பது உண்மையா?
இது தொடர்பாக, ஊடகவியலாளர்கள், புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலக செய்தித்தொடர்பாளரான Samuel Wyss என்பவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த Samuel Wyss, பொதுவாக, குடியுரிமை பெற அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் இல்லை என்றார். இன்றைய நிலவரப்படி, அதிகபட்ச வயதுடைய இருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருக்கிறார்களென்றால், அவர்கள் வயது 97 என்றும் கூறினார் அவர்.
ஆக, சுவிஸ் குடியுரிமை பெற வயது வரம்பு எதுவும் கிடையாது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |