கிழக்கு ஆளுநரின் நடவடிக்கை: உயர்கல்வி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்!
நீண்ட நாட்களாக நியமனம் வழங்கப்படாதிருந்த 48 டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் தலையீட்டில் 24 மணித்தியாலங்களுக்குள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள 48 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, இன்று(08.08.2023)கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு நேற்று(07.07.2023) கொண்டுவரப்பட்டதையடுத்து ஆளுநரின் அதிரடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள்
6 வருடங்களுக்கு மேல் ஒவ்வொரு நாளும் இந்த நியமனத்திற்காக காத்திருந்ததாகவும், இந்த நியமனம் எமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நியமனத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் தெரிவிதுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம செயலாளர் ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் மதநாயக்க, பிரத்தியேக செயலாளர் அணில் விஜயஶ்ரீ, கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் கோபாலரட்ணம், சுகாதார அமைச்சின் செயலாளர் முரளிதரன் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |