ஹோர்மூஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பில் 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை: பிரான்ஸ் தகவல்
ஹோர்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பில் 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை
ஈரானுடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போரைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்மீஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், ஜலசந்தி மூடல் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பில் 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
என்றாலும், ஹோர்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய்க்கப்பல்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பிலான எந்த நடவடிக்கையும், போர் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
REUTERS/Stringer/File Photo//File Photo Purchase Licensing Rights
அதாவது, போர் முடிந்தாலும், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய்க்கப்பல்கள் சென்றுவருவது விடயத்தில் ஈரான் பிரச்சினையை உருவாக்கலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.
அதாவது, ஹோர்மூஸ் ஜலசந்தியிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றுதல், கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பளித்தல் போன்ற விடயங்களில் உதவ இந்த நாடுகள் திட்டமிட்டுவருகின்றன.
இதற்கிடையில், பிரான்ஸ் கடற்படை தலைவரான அட்மிரல் நிக்கோலஸ் வாஜோர், பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் முதலான 12 நட்புநாடுகளின் கடற்படைத் தளபதிகளிடம் கடல் பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |