ஒரு நாளைக்கு 7 ரூபாய் சேமித்தால்., ஓய்வுக்குப் பிறகு பணக்காரராகலாம்.!
ஓய்வுக்குப் பிறகு மாத வருமானம் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு எப்படியாவது ஓய்வுக்குப் பிறகு நல்ல ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், தனியார் நிறுவனங்களில் தினக்கூலி வேலை செய்பவர்கள் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்பவர்களின் நிலை என்ன..?
அடல் பென்ஷன் யோஜனா
வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவது அத்தகையவர்களுக்கு கடினமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) என்ற நல்ல திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இத்திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்தால், முதுமையில் மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தில் சேருபவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 ஓய்வூதியம் பெறலாம். கணவன்-மனைவி இருவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ரூ. 10,000 ஓய்வூதியம் பெறலாம்.
40 வயதிற்கு மிகாமல்..,
ஆனால் இந்த திட்டத்தில் சேருபவர்களின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 20 வருட முதலீடு தேவைப்படும். 60 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறலாம்.
உதாரணமாக உங்களுக்கு 18 வயது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நீங்கள் திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ. 210, அதாவது நாள் ஒன்றுக்கு ரூ. 7 முதலீடு செய்தால் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் பெறலாம்.
நீங்கள் ரூ. 1000 ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 18 வயது முதல் மாதம் ரூ. 42 டெபாசிட் செய்தால் போதும். இத்திட்டத்தில் இணைந்த கணவர் 60 வயதுக்குள் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இருவரும் இறந்துவிட்டால் நாமினிக்கு அதுவரை முதலீடு செய்யப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்படும்.
திட்டத்தில் சேர..,
மேலும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர, நீங்கள் தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்க வேண்டும். மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு மாதாந்திர, காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்யலாம். ஆட்டோ டெபிட் வசதியும் உண்டு. இது ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து தானாகவே பணம் கழிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரியைச் சேமிக்கவும் முடியும். ரூ. 1.5 லட்சம் வரை வரி சேமிப்பு செய்யலாம். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் இந்த விலக்கு பெறலாம். இத்திட்டம் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Atal Pension Yojana, APY Scheme, Atal Pension Yojana Scheme