தர்கா சந்தனக்கூடு விழா! ஆடி காரில் வந்து ஆட்டோவில் புறப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்
தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவுக்கு பங்கேற்க ஆடி காரில் வந்த ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.
சந்தனக்கூடு விழா
சென்னை அண்ணாசாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் மத வேறுபாடுகள் இன்றி வழிபடுவது வழக்கமாகும்.
450 ஆண்டுகளுக்கு முன்பு ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி, பாக்தாத் ஷரீப்பில் இருந்து வந்து தற்போது மவுண்ட் ரோடு தர்கா என்று அழைக்கப்படும் இடத்தில் வாழ்ந்தார்.
பின்னர், அவர் இறந்தவுடன் வீட்டிற்கு பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டர். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
ஆட்டோவில் சென்ற ஏ.ஆர்.ரகுமான்
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வந்தார்.
அங்கு ஆடி காரில் வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தார். பின்னர், கூட்டம் அதிகரித்ததால் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |