மகள் மற்றும் மருமகனின் அழகான வீடியோவை பகிர்ந்த ஏஆர் ரஹ்மான்
பிரபல இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் மகளின் திருமண வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதீஜா, ரஹீமா என்று இரண்டு மகள்களும் ஆமீன் என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகளான கதீஜாவுக்கும், ஆடியே இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த 5ம் தேதி எளிமையாக திருமணம் நடந்தது.
நெருங்கிய சொந்த பந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர், அழகான இந்த தருணத்தை ஏஆர் ரஹ்மான் புகைப்படமாக வெளியிட வைரலானது.
இந்நிலையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு, மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
இதிலும் நெருங்கிய உறவினர்கள், நட்புக்கள் மற்றும் டெக்னீஷியன்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த அற்புதமான தருமணத்தை 12 நிமிட வீடியோவாக ஏஆர் ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பதிவிட வைரலாகி வருகிறது.
பலரும் ”ஒரு தந்தையாக கடமையை நிறைவேற்றுவிட்டீர்கள், என்ன ஒரு எளிமை திருமணத்தில்” என புகழ்ந்து வருகின்றனர்.