திடீர் நெஞ்சுவலி.., இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதித்த ரகுமான்
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார்.
இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறது.
திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |