காதலுக்கு மரியாதை! பிரபல நடிகைக்கு தரமான பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்
தன்னுடைய மனைவிக்கு தமிழில் சரளமாக பேசத் தெரியாதது குறித்து கேள்வி கேட்ட நடிகை கஸ்தூரிக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்திய சினிமாவின் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான், 1992ம் ஆண்டு ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.
ஆஸ்கர் விருது வென்று இந்தியர்களை பெருமைப்படுத்தியவரும் இவரே, மேலும் மேலும் பல வெற்றிப்பாடல்களை கொடுத்து இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது இசையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் நடந்த விகடன் விருது விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், இதற்கு காரணம் என் மனைவியே, நான் என் பேட்டிகளை திரும்பவும் கேட்க மாட்டேன், ஆனால் என் குரலுக்காக என் மனைவி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பார்” என்றார்.
தொடர்ந்து அவரது மனைவி சாய்ரா பானுவை பேச வருமாறு அழைத்தார், அவரும் வெட்கப்புன்னகையுடன் மேடை ஏறியதும், “ஹிந்தியில பேசாதீங்க, தமிழில் பேசுங்க” என்றார்.
உடனே அரங்கத்தில் சிரிப்பலை எழ, “தமிழில் சரளமாக எனக்கு பேச வராது, அவரது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும், அந்த குரலில் தான் காதலில் விழுந்தேன்” என ஆங்கிலத்தில் கூறினார்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
டுவிட்டரில் நடிகை கஸ்தூரியோ, என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள், காதலுக்கு மரியாதை என தகுந்த பதிலடி கொடுத்துள்ளார், இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
காதலுக்கு மரியாதை?? https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023