ரூ.2 கோடி அபராதம்: ஏஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களை பெற்றிருப்பவர் ஏ.ஆர் ரஹ்மான்.
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார்.
நிறைய விருதுகள் வந்து குவிய ஆஸ்கர் விருதையும் வென்று ஆஸ்கர் நாயகன் என்றழைக்கப்படுகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த ”வீரா ராஜ வீரா” பாடல் தொடர்பில் பயாஸ் வாசிபுதீன் டெல்லி நீதிமன்றத்தில் காப்புரிமை வழக்கு தொடர்ந்தார்.
1970ம் ஆண்டு தனது தாத்தா மற்றும் தந்தையால் இசையமைக்கப்பட்ட ”சிவ ஸ்துதி” என்ற பாடலில் இருந்து நகலெடுக்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
ஏஆர் ரஹ்மான் தரப்பில் முக்கிய இசைக்கோப்புகளை சமர்பிக்கப்பட்டதுடன், சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டே வீரா ராஜ வீரா பாடலை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நீதிமன்றம் அதிரவு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது, அதாவது ஏஆர் ரஹ்மான் 2 கோடி ரூபாயை அபராதமாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இதனை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க ஏஆர் ரஹ்மான் தரப்பினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.