இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்.., அவரது சொத்துமதிப்பு எவ்வளவு?
விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.
தமிழ் சினிமாவின் 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
கோலிவுட்டில் தொடங்கிய ரகுமானின் இசைப்பயணம் பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், ஹாலிவுட் என 2000க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார்.
முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான், இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மேலும், 30க்கும் மேற்பட்ட Filmfare Awards, 2 Oscar Awards, Grammy Award, BAFTA உட்பட உலகம் முழுவதும் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
அதேபோல், வந்தே மாதரம் உள்ளிட்ட பல பிரபலமான ஆல்பங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இத்தனை சாதனைகளுக்கு சொந்தமான ஏ.ஆர்.ரகுமானின் முழு சொத்துமதிப்பு குறித்து பார்க்கலாம்.
சென்னை கோடம்பாக்கத்தில் பிரம்மாண்டமான வீடு, ஸ்டூடியோ வைத்திருக்கிறார். இந்த ஸ்டூடியோவில் பல கோடி மதிப்புடைய கம்ப்யூட்டர், மியூசிக் அரேஞ்மெண்ட்ஸ் வைத்திருக்கிறாராம்.
சென்னை பூந்தமல்லி பகுதியில் சொந்தமாக இசைப் பள்ளி வைத்து நடத்தும் ஏ.ஆர்.ரகுமான், அங்கேயும் பிரம்மாண்டமான ஸ்டுடியோ வைத்துள்ளார்.
இதுதவிர மும்பை, லண்டன், அமெரிக்காவிலும் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான அதிநவீன ஸ்டுடியோக்கள் இருக்கின்றன.
சமீபத்தில் துபாயில் ஃபிர்தெளஸ் என்ற ஹைடெக் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். அதன் மதிப்பு பல கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரகுமான் மேடை நிகழ்ச்சிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி மாதம் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை வருமானம் ஈட்டும் ஏ.ஆர்.ரகுமான், ஆண்டுக்கு ரூ.50 முதல் ரூ.60 கோடி வரை சம்பாதிக்கிறார்.
மேலும், இவரிடம் Audi, BMW, Volvo, Benz உள்ளிட்ட சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.
ஆகமொத்தம், ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.1700 கோடிக்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |