இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஏ. ஆர். ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி
பிரபல இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஒரு இசை நிகழ்ச்சி
நாளை ஞாயிற்றுக்கிழமை, அட்டாரி வாகா எல்லையில், இயக்குநர் இம்தியாஸ் அலியின் குழுவினர் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஏ. ஆர். ரஹ்மான் பங்கேற்கும் அந்த இசை நிகழ்ச்சி, நாளை மாலை 4.30 முதல் 5.30 வரை, பஞ்சாப் எல்லைக்கருகிலுள்ள JCP மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை தொடர்புடைய திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ள இம்தியாஸ் அலி, அவரது திரைப்படக்குழுவினருடன் பல்வேறு பாடகர் பாடகியரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்கள்.

மைன் வாபஸ் ஆவூங்கா (Main Vaapas Aaunga) என்னும் அந்த திரைப்படத்தில், தில்ஜித் தோசான்ஞ், நஸ்ருதீன் ஷா மற்றும் வேதாங் ரைனாவுடன், சமீப காலமாக கவனம் ஈர்த்துவரும் ஷர்வாரி வாஹ் என்னும் நடிகையும் நடிக்கிறார்.

இந்த இசை நிகழ்ச்சி, திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்க இயலாத, எல்லையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |