கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி.!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருவதால், அமெரிக்காவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரு வேட்பாளர்களும் வெற்றி பெறும் நோக்கில் வியூகமாக முன்னேறி வருகின்றனர். வாக்காளர்களை திருப்திப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பிறகும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள் (AAPI) நிதி திரட்டி வருகிறது.
இந்த சூழலில், ஒரு புதிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ரஹ்மான் அதற்காக ஒரு புதிய வீடியோவையும் உருவாக்கியுள்ளார். ரஹ்மான் உருவாக்கிய 30 நிமிட வீடியோவில். கமலா ஹாரிஸை ஆதரிக்கும் தலைவர்களின் குரல் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ அக்டோபர் 13-ஆம் திகதி இரவு 8 மணி முதல் AAPI Victory Fund என்ற யூடியூப்பில் கிடைக்கும். இதனை ஏஏபிஐ வெற்றி நிதியத்தின் தலைவர் சேகர் நரசிம்மன் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் திகதி நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AR Rahman Kamala Harris