இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்-மனைவி சாய்ரா விவாகரத்து: ரசிகர்கள் அதிர்ச்சி
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
ஏ.ஆர் ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவு
ஆஸ்கார் விருது பெற்ற இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி தங்களது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
1995ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏ.ஆர் ரஹ்மானுக்கும், சாய்ராக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
ஏ.ஆர் ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவு தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "இந்த கடினமான காலகட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சைரா விரும்புவதாக அவரது வழக்கறிஞர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Shocking: #ARRahman and #SairaBanu announce separation. pic.twitter.com/l2OcBkUkD2
— TrackTollywood (@TrackTwood) November 19, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |