சாதத்துக்கு ஏற்ற அரைச்சுவிட்ட சாம்பார் கறி - இலகுவாக செய்வது எப்படி?
வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் சாம்பார் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சாம்பார் செய்வதாக இருந்தால், மசாலாவை அரைத்து ஊற்றி செய்யுங்கள். அதை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பருப்பை வேகவைக்க
- துவரம் பருப்பு - 1 கப்
- வெங்காயம் - 2 நறுக்கியது
- தக்காளி - 3 நறுக்கியது
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
- தண்ணீர்
மசாலா விழுது அரைக்க
- கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
- முழு தனியா - 2 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 12
- தேங்காய் - 1/2 கப் துருவியது
- பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
- தண்ணீர்
- சாம்பார் செய்ய
- நெய் - 3 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 300 கிராம்
- முருங்கைகாய்
- புளி
- தண்ணீர் - 1/2 கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- வெல்லம் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
4. பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
5. பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
6. ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
7. பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
8. அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
9. வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
10. இறுதியாக வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |