முதல்வர் விஜய்யின் துறையிலே டெண்டரில் முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

Vijay Tamil nadu
By Karthikraja Sep 15, 2026 12:03 PM GMT
Report

arappor iyakkam alleges tendar scam in tambaram corporation: முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.

முதல்வரின் துறையிலே டெண்டரில் முறைகேடு

மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவர்களை விட மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூறி வரும் நிலையில், அவரின் துறையிலே டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

முதல்வர் விஜய்யின் துறையிலே டெண்டரில் முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு | Arappor Iyakkam Alleges Tvk Govt Tender Scam

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, அமைச்சர் சரத்தால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாகவும், மேலும் ரூ.45 லட்சத்திற்கு ஊழல் நடைபெறுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோவில் பேசியுள்ளார். 

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில், "தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.

முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.

இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2) 

இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.

ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.

ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1)

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.

ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன.

டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.

அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு

இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன.

பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.

மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.

அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்

இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.

1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை

2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை

3.DVAC கிரிமினல் வழக்கு

4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment)

5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting)

6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை" என பதிவிட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி, இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவெக ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US