இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பு! நடப்பாண்டில் வரவுள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்களிலிருந்தும் நட்சத்திர வீரர் விலகல்
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக நடப்பாண்டில் (2021) வரவுள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஆர்ச்சருக்கு, கடந்த வாரம் ஸ்கேன் எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் முடிவில் அவருக்கு மீண்டும் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் இந்தியாவுடனான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர் என நடப்பாண்டில் வரவுள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
We're gutted for you and all behind you, @JofraArcher.
— England Cricket (@englandcricket) August 5, 2021
பென் ஸ்டோக்ஸை தொடர்ந்து தற்போது ஆர்ச்சரும் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிமாக ஓய்வுப் பெற்றுள்ளது
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரிய இழப்பாக அமையவுள்ளது.