கனடா நகரில் அவசரநிலை பிரகடனம்... தண்ணீர் குடிக்க வேண்டாம் என மக்களுக்கு உத்தரவு
கனடாவின் Nunavut பிரதேசத்தில் உள்ள நகரம் ஒன்றில் உள்ள மக்கள் தண்ணீரை குடிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Nunavut பிரதேசத்தின் தலைநகர் Iqaluit-ல் குடியிருப்பாளர்களுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Iqaluit நகரில் சுமார் 7000 குடியிப்பாளர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Iqaluit நகரில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் எரிபொருள் மாசுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால் அதை குடிக்கவோ, சமையலுக்கு பயன்படுத்தவோ வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகர அதிகாரிகள் கூறியதாவது, வார இறுதியில் தண்ணீரில் எரிபொருள் வாசனை வருவதாக நகர குடியிப்பாளர்களிடமிருந்து புகார் வந்தது.
ஆனால், தண்ணீரில் எப்படி எரிப்பொருள் கலந்தது என தெரியவில்லை. தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலும் அது பாதுகாப்பானது இல்லை என நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஹைட்ரோகார்பன் மாசுபாடு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவு வர ஐந்து நாட்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, Iqaluit நகர வாசிகளுக்கு லொறி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
லொறியில் வரும் தண்ணீரை குறைந்தபட்சம் 1 நிமிடமாவது கொதிக்க வைத்து குடிக்குமாறு நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.