ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவையா? அதிகம் சாப்பிட்டால் உயிரே எடுக்குமாம்!
பொதுவாக ஆப்பிள் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு பழமாக காணப்படுகின்றது. ஆனால் ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தாக கருதப்படுகின்றது.
ஆப்பிள் விதைகளில் அமிக்டாலின் உள்ளது. இது மனிதனின் செரிமான மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும் போது சர்க்கரை மற்றும் சயனைடை வெளிப்படுத்துகிறது. இது உடலின் உட்பகுதியில் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்படுகிறது.
இது கடுமையான நச்சுத்தன்மையை கொண்டுள்ளது. சயனைடு பழங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப்பொருளாகும். சயனைடு ஆக்ஸிஜன் சப்ளையை தடைசெய்து விடுகிறது. இந்த சயனைடு ஆப்ரிகட்ஸ், செர்ரி, பிளம்ஸ் ஆகியவற்றிலும் இருக்கிறது.
இதனை அதிகளவு எடுத்து கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்ககூடியதாக அமைகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பக்கவிளைவு
- இந்த விதைகளை எவ்வளவு சாப்பிட்டால் விஷத்தன்மை உண்டாகும் என்றால், 200 அதாவது ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டால், இது உடலை கடுமையாக பாதிக்கும்.
- இந்த விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால், இது இருதயம், மூளை ஆகியவற்றை பாதித்துவிடும். கோமா நிலை மற்றும் இறப்புகள் கூட அரிதாக நடைபெறலாம்.
- இதனை மிகவும் அதிகமான அளவு எடுத்துக்கொண்டால், சுவாசக்கோளாறு, மூச்சுச்திணறல், இதயத்துடிப்பு அதிகமாவது, இரத்த அழுத்த குறைவு போன்றவை உண்டாகும்.
- குறைந்த அளவு ஆப்பிள் விதைகளை உட்கொண்டால், வாந்தி, தலைவலி, வயிற்று வலி, மயக்கம், சோர்வு ஆகியவை உண்டாகும். எனவே இதில் கவனம் தேவை.
முக்கிய குறிப்பு
ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது. அப்படியே அதன் விதைகளை சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உமிழ்ந்துவிடுங்கள்.
இது செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.