Omicron வைரஸும் Flu வைரஸும் ஒன்றா?: சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மீது விமர்சனம்
Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸை, ப்ளூ வைரஸுடன் ஒப்பிட்ட சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, தடுப்பூசிகள் உதவியுடன் கோவிட் தொற்றை ப்ளூ காய்ச்சலை சமாளிப்பது போல சமாளித்துவிடலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், சுவிஸ் வைரஸ் துறை அறிவியலாளரான Andreas Cerny, சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து, தவறான செய்தியை உலகுக்கு தெரியப்படுத்துவதாகவும், அதனால் பூஸ்டர் தடுப்பூசி பிரச்சாரம் அச்சுறுத்தலுக்குள்ளாகலாம் என்றும் விமர்சித்துள்ளார்.
ப்ளூ வைரஸைப் போலில்லாமல் Omicron வைரஸ் மிக அதிக அளவில் பரவக்கூடியது என்றும், ஆகவே, அது அதிகம்பேரை தொற்றக்கூடியது என்றும் Cerny தெரிவித்துள்ளார். அத்துடன், Omicron வைரஸால் என்னென்ன நீண்ட கால விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து நமக்கு இப்போதைக்கு போதுமான அளவுக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் கருத்துகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் நன்மைகள் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் Cerny எச்சரித்துள்ளார்.