புரதம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?
மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் புரதம் உள்ளது. புரதத்தின் அடிப்படை, அமைப்பு அமினோ அமிலங்களின் சங்கிலி ஆகும்.
உங்கள் உடலில் உள்ள செல்களை சரிசெய்யவும், புதியவற்றை உருவாக்கவும் உங்கள் உணவில் புரதம் தேவை.
குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் வளர்ச்சி மற்றும் கரு வளர்ச்சிக்கும் புரதம் முக்கியமானது. புரதம் அதிகமுள்ள உணவுகளை இப்போது பார்க்கலாம்.
பன்னீர்
பன்னீர் உள்ளது. இது கேசீன் புரதத்தின் வளமான மூலமாகும். பன்னீரில் 100 கிராமுக்கு 18 கிராம் புரதம் உள்ளது.
முட்டை
ஒரு முழு முட்டையில் 7 கிராம் புரதம் உள்ளது.
ஒரு பெரிய முட்டை சுமார் 50 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.
எனவே 100 கிராம் முட்டையில் 14 கிராம் புரதம் இருக்கும்.
கோழி இறைச்சி
அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளில் கோழி இறைச்சியும் ஒன்று.
கோழி மார்பகம் ஒல்லியானது மற்றும் எடையில் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இது உடல் எடையை குறைக்கவும், தசை பராமரிக்கவும், இழந்த சக்தி புதுப்பிப்பக்காகவும் விரும்புபவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
Greek yoghurt
யோகர்ட்கள்,அதிக அளவில் புரதத்தை கொண்டுள்ளன. இதில் 6.7 கிராம் புரதம் உள்ளது. எனவே இவற்றை எடுத்து கொள்வது இன்னும் சிறந்தது.
புரதச்சத்து அதிகமுள்ள நட்ஸ்கள்
முந்திரி, பைன் கொட்டைகள், பிரேசில் கொட்டைகள்., வேர்க்கடலை, Hazelnuts போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இது தாவர புரதத்தின் நல்ல ஆதாரமாக உள்ளது குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது.
சோயாபீன்கள்
சோயாபீன்களில் உள்ள புரதத்தின் முக்கிய வகைகள் கிளைசினின் மற்றும் காங்கிளிசினின் ஆகும். இது மொத்த புரத உள்ளடக்கத்தில் சுமார் 80% ஆகும். இந்த புரதங்கள் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.