தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உண்டா?
Cholesterol
Immunity
Alzheimers
By Kishanthini
தேங்காய் நாம் உட்கொள்ளக் கூட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இது ஏராளமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. தேங்காயில் ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன.
அதிலும் தேங்காய்க்குள் காணப்படும் வெள்ளை சதை போன்ற பகுதி இன்னும் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.
இது சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.
அந்தவகையில் தேங்காய் சதை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தேங்காய் சதையில் காணப்படும் தேங்காய் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- தேங்காய் சதை உங்க உடல் எடையை குறைக்க உதவி செய்யும். இது வயிறு நிரம்பிய உணர்வை தரக் கூடியது. இதனால் நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படும். அது மட்டுமல்லாமல் தேங்காயின் சதைப்பகுதி கொழுப்பு எரிபொருளாக செயல்படுகிறது.
- தேங்காய் சதைப்பகுதியில் மாங்கனீசு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆன்டி வைரஸ் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
- உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய் சதைப்பகுதியை சாப்பிட்டு வருவது உங்க இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்யும்.
- தேங்காய் எண்ணெய் குளுக்கோஸ்க்கு மாற்றாக செயல்படுகிறது. அதாவது அல்சைமர் போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
- தேங்காய் சதையில் உள்ள தாதுக்கள் மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் போன்றவை வெவ்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை.
- தேங்காய் சதை ஆரோக்கியமான கொழுப்பு , தாதுக்கள், நார்ச்சத்துக்கள் இவற்றின் வளமான மூலங்களாகும். மோனோ சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் உள்ளன. இவை உடனடியாக சீரணிக்கப்படுகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US