பச்சை குத்துவதால் எதாவது நன்மைகள் உள்ளதா?
பச்சை குத்தல்கள் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை குறிப்பதாக இருக்கும்.
அது அவர்களின் கடந்த கால நிகழ்வு, அனுபவம் அல்லது உணர்ச்சி அல்லது ஊக்கமளிக்கும் செய்தியை அடையாளப்படுத்தினாலும், அது அவர்களுக்கு நம்பிக்கை, உத்வேகம் மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக சிலர் நம்புகின்றனர்.
பச்சை குத்துவதால் சேதம் ஏற்படுமா?
பச்சை குத்திக்கொள்வதில் பயன்படுத்தப்படும் மைகள் பெரும்பாலும் கன உலோகங்களிலிருந்து பெறப்பட்ட நிறமிகளைக் கொண்டிருக்கின்றன.
இந்த நச்சுகள் புற்றுநோய், DNA சேதம், வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
அத்தோடு பலவீனமான நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கலாம் என்பது உறுதியான உண்மை. பச்சை குத்தல்கள் பிரபலமாக உள்ளன, ஆனால் அவை ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் தருவதாகவும் உள்ளன .
யாரெல்லாம் பச்சை குத்துக்கூடாது?
கர்ப்பம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பச்சை குத்தக்கூடாதாம்.
புகழ்பெற்ற டாட்டு கடைகள் கர்ப்பமாக இருக்கும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பச்சை குத்த அனுமதிப்பதில்லை.
நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை குத்தக்கூடாது. சொரியாசிஸ்,எக்ஸிமா,இரத்தக் கோளாறுகள் இருப்பவர்களும் குத்தக்கூடாது என தகவல்கள் கூறுகின்றன.
அதையும் மீறி உங்களுக்கு பச்சை குத்தும் ஆசை இருப்பின்…
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் பச்சை குத்த வேண்டாம். உங்களுக்கு பச்சை குத்த பயன்படுத்தும் அனைத்து ஊசிகளும், புத்தம் புதியவை என்பதை உறுதிப்படுத்தவும்.
ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் கருவிகளில் உள்ள கிருமிகளைக் கொல்ல ஸ்டுடியோவில் இயந்திரங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.
பச்சை குத்துபவர் தங்கள் கைகளை கழுவி, ட்ரான்ஸ்பேரண்ட் கையுறைகளை அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பச்சை குத்தியிருந்தால் இரத்த தானம் செய்யலாமா?
நீங்கள் சமீபத்தில் பச்சைக்குத்தியிருந்தால் நீங்கள் பச்சை குத்திய தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு நீங்கள் தானம் செய்ய முடியாது.
பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணரால் மேற்கொள்ளப்பட்டு, அழற்சிகள் முழுமையாகத் தீர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, நீங்கள் 12 மணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்யலாம்.
பச்சை குத்துவதால் தீமைகளே அதிகம்
எவ்வாறாயினும் ஆய்வகள் கூறுவது என்னவென்றால் பச்சை குத்துவதால் சிறப்பான நன்மைகள் எதுவும் இல்லை . பல பேர் அழகுக்காக மற்றும் பேஷனிற்காக குத்திக்கொள்கிறார்கள் என்பதே உண்மை .