வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை: இன்னும் பல நன்மைகள்
ஊட்டச்சத்து மிகுந்த கீரை வகைகளில் ஒன்று மணத்தக்காளி கீரை, இது அற்புதமான மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்டது.
மணத்தக்காளி கீரையை குழம்பு, சூப், கூட்டு செய்து சாப்பிடலாம்.
இக்கீரையில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் குணமாகும், மேலும் இதிலுள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதன் பழத்தை சாப்பிடுவதால் காசநோய் பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகள் நன்றாக ஊட்டம் பெற மணத்தக்காளியில் ரசம் வைத்து கொடுக்கலாம்.
இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும். மேலும் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கி என உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.
கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
மணத்தக்காளியின் ஊட்டச்சத்து மதிப்பு
100 கிராம் மணத்தக்காளியில்,
சுமார் 68 கலோரிகள்,
8.9 கிராம் கார்போஹைட்ரெட்,
2.1 கிராம் தாதுக்கள் ,
1.0 கிராம் கொழுப்பு,
5.9 கிராம் புரதம்,
410 மி.கி கால்சியம்,
70 மி.கி பாஸ்பரஸ் மற்றும்
20.5 மி.கி இரும்புச்சத்து உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |