விடுமுறையில் பயணம் செய்யப்போகிறீர்களா? அது பாதுகாப்பானதுதான்... ஆனால்: அறிவியலாளர்களின் ஆலோசனை
இது விடுமுறைக் காலம்...
வெளியே Omicron மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் நடமாடினாலும் கூட, நீங்கள் தடுப்பூசியும் பெற்று, கவனமாகவும் இருக்கும் பட்சத்தில், விடுமுறைக்கான பயணமும் பாதுகாப்பானதுதான் என்கிறார் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர்.
கனடா, கொரோனா காலகட்டத்தின் நடுவில், இரண்டாவது விடுமுறைக் காலத்தை சந்திக்கிறது. அதுவும், இப்போது அதிகம் பரவுவதாக கருதப்படும் Omicron வகை கொரோனா பரவல் வேறு உள்ளது.
ஆனால், இந்த நிலையிலும், விடுமுறைக்கான பயணம் பாதுகாப்பானதுதான் என்கிறார் தொற்றுநோயியல் நிபுணரான Nazeem Muhajarine. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீங்கள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பும்போது உங்களுடன், அழையா விருந்தாளியாக இந்த Omicron வகை கொரோனா வைரஸை மட்டும் கொண்டுவரவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறார் அவர்.
அதே நேரத்தில், பயணத்துக்கு அனுமதிப்பதால், இந்த Omicron வகை கொரோனா வைரஸ் சீரியஸானது அல்ல என்ற எண்ணமும் யாருக்கும் உருவாகிவிடக்கூடாது என்றும் கூறுகிறார் அவர்.
அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள், முடிந்தால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறும் Nazeem, கூடவே, பயணிக்கும்போதும், உங்களுடன் இருப்பவர் தடுப்பூசி பெற்றவரா என்பது தெரியாதபோதும், மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும், ஒருவர் தடுப்பூசி பெற்றவரா இல்லையா என்பது தெரியாத பட்சத்தில் அவரைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களை வெளியிடங்களில் சந்திக்கவிரும்பாவிட்டால், குறைவான நபர்களுடன், ஜன்னல்கள் திறந்திருக்கும் அறைகளில் கூடி சந்திக்கலாம் என்றும், பயணம் புறப்படுவதற்கு முன்பும், வீடு திரும்பும் முன்பும், ஆன்டிஜன் வகை கொரோனா பரிசோதனைகளை செய்து தங்களுக்கு கொரோனா தொற்றவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம் என்றும் Nazeem ஆலோசனை கூறியுள்ளார்.